கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகளில் நகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகின்றது. இதனை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இருந்தபோதிலும் வைரஸின் தாக்கம் குறையாமல் நாளுக்கு நாளுக்கு அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்நிலையில் உணவு விடுதி, காய்கறி கடை, பால் கடை உள்ளிட்ட கடைகள் இரவு 12 மணி வரை மட்டுமே இயக்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் 50 சதவீத பயணிகளோடு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகின்றது. இதனால் அப்பகுதிகளில் நகராட்சி சார்பில் ப்ளீச்சிங் பவுடர் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் பொதுமக்கள் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும் முகக்கவசம் கண்டிப்பாக அணிந்து கொண்டு வெளியே செல்ல வேண்டும் எனவும் நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.