Categories
திண்டுக்கல் மாநில செய்திகள்

கொரோனா அச்சம்….. சாக்கடைக்குள் இறங்கி….. சுத்தம் செய்யும் பணி….!!

நாடே ஊரடங்கால் வீட்டுக்குள் முடிந்திருக்கும் சூழ்நிலையும் துப்புரவு பணியாளர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக 144 தடை உத்தரவானது ஏப்ரல் 14ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் இந்நிலையில், மருத்துவர்களும், துப்புரவு பணியாளர்களும் தன்னலம் கருதாமல் பிறர் நலம் கருதி உழைத்து வருகின்றனர். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் இந்த சூழ்நிலையில் வீடுதோறும் சென்று குப்பைகளை சேகரித்து வருவதோடு மட்டுமல்லாமல்,

சாக்கடை அடைப்புகளை சரி செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மக்கள் அதிகம் நடமாடும் நேரங்களில் இந்த பணியை செய்வது அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் தற்போது செய்தால் சரியாக இருக்கும் என நினைத்து சாக்கடைக்குள் இறங்கி அடைப்பை தோண்டி எடுத்து சுத்தம் செய்து பின் ஆங்காங்கே கிருமி நாசினி தெளித்து நோய் கிருமி பரவுவதைத் தடுத்து வருகின்றனர். உயிரை காக்கும் மருத்துவர்கள் , நோய் வராமல் தடுக்கும் துப்புரவு பணியாளர்கள் இவர்களுக்கு இந்த நேரத்தில் பாராட்டு தெரிவிப்பது நம் அனைவரின் கடமை.

Categories

Tech |