கன்னியகுமாரியில் 2 கிலோ நகை ரூ1,00,000 பணத்தை திருடி சென்ற மர்மநபரை cctv காட்சிகளை கொண்டு காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை அடுத்த விழிகோடு பகுதியில் வசித்து வருபவர் ஆசைத்தம்பி. இவருடைய மகன் பொன் விஜயன். இவர்கள் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் எதிரே கட்டிட வேலைக்கு பயன்படும் பொருட்களை விற்பனை செய்யும் கடை மற்றும் நகை கடை வைத்து நடத்தி வருகின்றனர். பொருட்களை விற்பனை செய்யும் கடையை மகனும், நகை கடையை ஆசைதம்பியை பார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மர்ம நபர்கள் ஆசைத்தம்பியின் வீட்டிற்கு மாடிப்படி வழியாக புகுந்து சென்று சொல்லி வைத்தபடி பூஜை அறைக்குள் சரியாக சென்று 57 பவுன் நகை, ஒரு லட்சம் ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை எடுத்ததோடு அங்கே இருந்த நகை கடை சாவியையும் எடுத்துக்கொண்டு நகைக் கடைக்குள் புகுந்து அங்கே இருந்து ஒன்றரை கிலோ தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை ஆராய்ச்சி செய்தபோது, அதில் கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது. ஆனால் முகத்தில் துணி கட்டியிருந்தார். இதையடுத்து தெருவிலிருந்த சிசிடிவி காட்சிகளை பார்க்கும்போது,
ஏற்கனவே அதே வீட்டில் பழக்கப்பட்டது போல் விரைவாக திருடியது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரிடம் வேலை பார்க்கும் கடை ஊழியர்களே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா ? அல்லது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடை ஊழியர்கள் துணை போனார்களா ? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.