ரூ10,000 கல்வி ஊக்கத் தொகையாக வழங்கப்படுமா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டும் அவர்களது கல்வியை ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாணவர்களுக்கும் ரூபாய் பத்தாயிரம் தேசிய கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும் என்ற செய்தி சமீபத்தில் மிக வைரலாக பரவி வந்தது. இதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு இது முற்றிலும் பொய்யான செய்தி.
உண்மை அல்ல என்று தெரிவித்ததுடன், மத்திய அரசுகளின் பெயர்களில் ஏராளமான வெப்சைட்கள் உலா வருகின்றன. அவற்றில் வரும் செய்திகளை உண்மை என நம்பி அதனை சமூக வலைத் தளங்களில் பகிர வேண்டாம். உண்மையான மத்திய அரசின் வெப்சைட் எதுவென அறிந்து மக்கள் செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.