Categories
டெக்னாலஜி

WhatsApp-இல் இதை கிளிக் பண்ணீராதிங்க…. புதிய அதிர்ச்சி செய்தி…!!

வாட்ஸ்அப்பை அப்டேட் செய்யுமாறு புதிய லிங்க் ஒன்று பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தி வந்த வாட்ஸ்அப் அனைவரிடையேயும்  வரவேற்பை பெற்று வந்தது. இதையடுத்து வாட்ஸஅப் நிறுவனமானது சமீபத்தில் செய்த தேவையில்லாத வேலையினால் ஏராளமான வாடிக்கையாளர்கள் வேறு செயலிக்கு மாறத் தொடங்கினர். இதையடுத்து வாட்ஸ்அப் நிறுவனத்தின் தனிநபர் பாதுகாப்பு விவகாரத்தால் பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பு அம்சம் வழங்கப்பட்ட புதிய வாட்ஸ் அப் செயலியை டவுன்லோட் செய்ய கோரி லிங்க் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கை கிளிக் செய்தால் நமது வங்கி கணக்கு உள்ளிட்ட தகவல்கள் திருடப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |