அமெரிக்காவில் ஒரு பருவகால செயல்பாட்டாளர் தன் மரணத்தேதியை ஒரு வருடத்திற்கு முன்பாகவே குறிப்பிட்டுவிட்டு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள கொலராடோ பகுதியில் வசித்து வந்த Wynn Bruce என்ற பருவகால செயல்பாட்டாளர் கடந்த 22ஆம் தேதி அன்று மாலை 6:30 மணிக்கு வாஷிங்டன் நகரில் இருக்கும் உச்ச நீதிமன்றத்தின் வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
எனினும், கடந்த சனிக்கிழமை அன்று சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தன் முகநூல் பக்கத்தில் Wynn Bruce, புத்த மதத்தை சேர்ந்தவர் எனவும் பருவகால செயல்பாட்டாளர் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், கடந்த 2020-ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் தன் முகநூல் பக்கத்தில் நெருப்பு குறித்த எமோஜியோடு 4-22-22 அன்று தன் மரண நாள் என்று குறிப்பிட்டிருக்கிறார். இது தொடர்பில் புத்தமதத்தின் பெண் சாமியாராக இருக்கும் கிரித்தீ கன்கோ கூறுகையில், அவரை எனக்கு நன்றாக தெரியும். என் நண்பர். இது தற்கொலை கிடையாது. பருவகால நெருக்கடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அவர் செய்த இரக்கத்துடன் கூடிய அச்சமில்லாத செயல் என்று கூறியிருக்கிறார்.