Categories
உலக செய்திகள்

“பருவநிலை மாற்றத்தால் இந்தியாவிற்கு பாதிப்பு!”.. அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட அறிக்கை..!!

பருவநிலை மாற்றத்தால் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நெருக்கடிகள் ஏற்படும் 11 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கேரளா மற்றும் உத்தரகாண்டில் கனமழை பெய்தது தான் வெள்ளப்பெருக்கிற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகமாக கார்பன் வாயுக்கள் வெளியேற்றப்படுகிறது. இதனால், வரும் 2040 ஆம் வருடத்தில் சர்வதேச அளவில் அரசியல் நெருக்கடி உண்டாகும், மேலும் அமெரிக்காவிற்கும் அதிக பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

அதே சமயத்தில், வெப்பமயமாதலை தடுப்பதற்காக இந்தியா புதுப்பிக்கத்தக்க மின்சக்திக்கு மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்வதை அங்கீகரிக்கிறோம் என்று அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |