நைஜீரியாவில் பயங்கரவாதிகள் பள்ளி மாணவர்களை கடத்திச்சென்று தங்களுக்கு தேவையான காரியங்களை சாதித்துக் கொள்வதால் அந்நாட்டில் அமைந்திருக்கும் பாதுகாப்பில்லாத சுமார் 7 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன.
நைஜீரியா நாட்டில் பள்ளி மாணவர்களை கடத்தி செல்லும் போகோஹரம் எனும் பயங்கரவாத அமைப்பு அவர்களை தற்கொலைப்படையினர்களாக மாற்றி வந்துள்ளார்கள். அதோடு மட்டுமல்லாமல் நைஜீரியாவிலிருக்கும் பிற பயங்கரவாத அமைப்புகள் பள்ளி மாணவர்களை கடத்திக் சென்று விட்டு தங்களுக்கு தேவைப்படுகின்ற விஷயங்களை சாதித்துக் கொள்கிறார்கள்.
மேலும் சில பயங்கரவாத அமைப்புகள் பள்ளிக்கூடங்களுக்கு உள்ளேயே புகுந்து அங்கிருக்கும் மாணவர்களை கடத்தி செல்லும் சம்பவங்களும் நைஜீரிய நாட்டில் நடை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது கெப்பி மாகாணத்தில் அமைந்திருக்கும் பாதுகாப்பில்லாத சுமார் 7 பள்ளிக்கூடங்கள் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ளது.