Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் ? – நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…..!!

கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதால் டாஸ்மாக் மதுக் கடைகளை மூட உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி , கல்லூரி , வணிக வளாகம் , பெரிய பெரிய மால்கள் , பார்கள், திரையரங்குகள் மூடப்பட்டன. பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அதிகப்படியான மக்கள் கூடும் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

 

இந்த மனுக்கள் மீது தமிழக அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்த நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. டாஸ்மாக் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இந்த மனு தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார்.

Categories

Tech |