4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை அடைக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று வீரியம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஜூன் 30ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சென்னை பெருநகர காவல் துறைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை பெருநகர காவல் பகுதிகளிலும்,
செங்கல்பட்டு பெருநகர சென்னை காவல் பகுதிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று டாஸ்மாக் மீட்டிங்கில் முடிவெடுத்திருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இதனால் 19ம் தேதியில் இருந்து வருகின்ற 30ஆம் தேதி வரை சம்மந்தப்பட்ட பகுதியில் டாஸ்மார்க் திறக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.