உலகின் ராட்சத பல்லிகள் இனமான கொமோடோ டிராகனை பாதுகாக்க கொமோடோ தீவையே மூட இந்தோனேசிய அரசு முடிவு செய்திருக்கிறது.
கொமோடோ தேசிய பூங்கா மூன்று தீவுகளை உள்ளடக்கியது. எழில் மிகுந்த கடற்கரையையும் இயற்கை அழகையும் கண்டு ரசிக்க இத்தீவிற்கு ஆண்டுதோறும் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2 லட்சம் ஆகும். கடற்கரை அழகை மட்டுமல்ல. பல்லி இனங்களிலேயே மிகப்பெரியதான கொமோடோ டிராகன் உயிரினங்களையும் இவர்கள் கண்டு களிக்கின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளால் இது அதிசய தீவாகவும் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கொமோடோ டிராகன் அதிகளவில் வேட்டையாடுவதை தவிர்க்க இந்த தீவை மூடப் போவதாக இந்தோனேஷியா அரசு அறிவித்திருக்கிறது. இதனால் பரம்பரை பரம்பரையாக அத்தீவில் வசிக்கும் 2000 ஆதிவாசிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்தோனேசியாவின் முடிவை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரவேற்றாலும் தலைமுறை தலைமுறையாக கொமோடோ தீவில் வசித்து வரும் ஆதிவாசிகளை இடமாற்றம் செய்யாமலும், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் தெரிவித்திருக்கின்றனர்.
ஆனால் ஜனவரி முதல் கொமோட தீவை மூடும் முடிவில் இந்தோனேசியா உறுதியாக இருக்கிறது. கொமோடோ டிராகன் களைப் பாதுகாக்கும் முயற்சியில் விலங்கின ஆர்வலர்கள் வரவேற்கின்றனர் இருப்பினும் அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினரின் வாழ்க்கை சூழல் பாதிக்கப்படாத வகையில் இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக உள்ளது.