தமிழகம் மற்றும் புதுவையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றோடு நிறைவடைந்தது.
மக்களவை தேர்தலில் தமிழகத்துக்கு ஏப்ரல் 18_ஆம் தேதி தேர்தல் நடைபெறுமென்றும் , 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் அன்றையதினமே நடைபெறுமென்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19_ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று . இன்றோடு வேட்புமனு தாக்கல் நிறைவடைகின்றது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை 3 மணியோடு வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி , அதிமுக தலைமையிலான கூட்டணி , அமமுக , மக்கள் நீதி மய்யம் , நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என இது வரை மொத்தம் 823 பேர் நாடாளுமன்ற தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
சென்னையை பொறுத்தவரை வடசென்னையில் 26 பேரும் , தென்சென்னையில் 44 பேரும் , மத்திய சென்னையில் 15 பேரும் வேட்புமனு செய்துள்ளனர். அதே போல 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக இதுவரை 309 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் 55 பேர் பெண்கள் 254 ஆண்கள் ஆகும். வேட்பாளர்களிடம் பெறப்பட்ட வேட்பு மனுக்கல் மீது நாளை பரிசீலனை நடைபெற உள்ளது. இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் . வேட்புமனுக்களை வாபஸ் பெற 29ஆம் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.