Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : சென்னையில் நாளை முதல் இறைச்சி கடை மூடல் …!!

சென்னையில் நாளை முதல் இறைச்சி கடைகள் என்பது மூடுவதற்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாவட்டத்தில் நாளை முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை அனைத்து இறைச்சி கடைகளையும் மூடப்பட வேண்டும் என்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் இறைச்சி கடைகள் மூடப்பட்டிருக்கிற நிலையில் தற்போது சென்னை மாவட்டத்தில் இருக்கும் அனைத்து வகை இறைச்சி கடைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பல்வேறு மாவட்டங்களில் இறைச்சி கடைகளில் மக்கள் அதிகளவில் கூடினார்கள். இதன் காரணமாக பல்வேறு வகையில் சமூக விலகல் கேள்விக்குறியாகியது. இந்த நிலையில் மக்கள் கூட்டத்தால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீறி திறந்தால் அபராதம் விதித்து, கடைக்கு சீல் வைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

Categories

Tech |