Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அரசு மருத்துவமனை தற்காலிகமாக மூடல்!

டெல்லி மாநாட்டிற்குச் சென்று திரும்பிய தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம், அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த டாக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதை தொடர்ந்து  அங்கு பணிபுரிந்த  மருத்துவர்கள் உள்ளிட்ட 21 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதில் 2 பணியாளர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் நடைபெற்ற  மாநாட்டில் பங்கேற்றுவிட்டு அவர் கடந்த மாதம் 23-ம் தேதி திரும்பி வந்துள்ளார். பின்னர்  காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் 3 நாட்கள் நோயாளிகளுக்கு அவர் சிகிச்சை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில்  கடந்த மார்ச் 25-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 1-ம் தேதி வரை சிகிச்சைக்காக காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு வந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் எவருக்கேனும்  கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மறு உத்தரவு வரும் வரை அம்மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது.  காயல்பட்டினத்திற்கு சீல் வைக்கப்பட்டு தொடர்ந்து  கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |