ரஷியாவில் 1 ரூபாய்க்கு துணிகள் விற்பனை என்ற அறிவிக்கப்பட்டதை அடுத்து 5 நிமிடத்தில் பெண்கள் கடையையே காலி செய்துள்ளனர்.
ரஷியா நாட்டின் உள்ள விளாடிகவ்கஸ் என்ற நகரில் அமைந்துள்ள ஷாப்பிங் சென்டரில் ஸ்டோலிஸ்டா என்ற துணிக்கடை இயங்கி வருகின்றது. இந்த கடை ஏராளமான வாடிக்கையாளர்களை கவர வேண்டும் என்பதற்காக அதிரடி சலுகை ஒன்றை அறிவித்தது. அதில் இந்திய மதிப்பில் ஒரு ரூபாய் என்ற விலையில் கடையில் துணிகள் விற்கப்படும் என்று கடைக்கு வெளியே விளம்பரம் செய்தது.
இந்த அறிவிப்பைக் கண்டதும் அங்குள்ள ஆண்கள் , பெண்கள் என கடையின் முன்பு கூட்டம் அலை மோதியது. பின்னர் கடை திறக்கப்பட்ட கடை திறந்த அடுத்த வினாடியே கடைக்குள் பெண்கள் திபுதிபுவென என்று சென்ற பெண்கள் அங்கு வைத்திருந்த துணிகளை அள்ளி சென்றனர்.கடையை திறந்த ஐந்தே நிமிடத்தில் அங்கிருந்த அனைத்து துணிகளும் விற்றுத் தீர்ந்தது.மேலும் இது போன்ற அதிரடி சலுகையை விரைவில் மீண்டும் அறிவிக்க உள்ளோம் என்று கடை நிர்வாகம் தெரிவித்துள்ளது.