துணியினால் செய்யப்பட்ட முகக்கவசம் அணிபவர்கள் தினமும் அதனை துவைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய பல்கலைக்கழக பேராசிரியர் அறிவுறுத்தியுள்ளார்
கொரோனா தொற்று பரவத் தொடங்கியதும் முக கவசம் அணிவதாலும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதாலும் தொற்றில் இருந்து தப்பிக்க முடியும் என பலரும் வலியுறுத்தி வந்தனர். பொது இடங்களுக்குச் செல்லும்போது முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருப்பவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினர். இதனையடுத்து பலரும் முகக்கவசம் அணிய தொடங்கினார்.
அதிலும் துணியினால் செய்யப்பட்ட முககவசம் ஏராளமான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த முக கவசத்தை தினமும் துவைப்பதை விட அழுக்கு ஏற்பட்டால் மட்டுமே துவைக்கலாம் என்ற எண்ணத்தில் பலர் இருக்கின்றனர். இது குறித்து ஆஸ்திரேலிய பல்கலைக்கழக பேராசிரியர் கூறுகையில், “துணியினால் செய்யப்பட்ட மாஸ் மற்றும் சர்ஜிக்கல் முகக்கவசம் இரண்டுமே மிகவும் எளிதாக அசுத்தமாகிவிடும். சர்ஜிக்கல் முக கவசத்தை ஒருமுறை மட்டும் தான் பயன்படுத்த முடியும். மீண்டும் அதனை பயன்படுத்த முடியாது.
துணியினால் செய்யப்பட்ட முதல் கவசத்தை துவைத்து மறுபடியும் பயன்படுத்தலாம். ஆனால் அதனை தினமும் துவைக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் போது அதில் கிருமிகள் படிந்து அசுத்தமாகிவிடுகிறது. நமது கண்களுக்கு அது அழுக்காக தெரியவில்லை என்றாலும் அதில் இருக்கும் கிருமிகள் ஆபத்தானது. நம்மை கிருமிகளிடம் இருந்து பாதுகாக்க முக கவசம் அணிவது எந்த அளவிற்கு முக்கியமோ அதே போன்று அதனை தினமும் துவைக்க வேண்டியது அவசியம்” என தெரிவித்துள்ளார்.