கிராம்பு குறித்து பலரும் அறிந்திடாத மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு
அனைவரது வீட்டிலும் இருக்கும் பொருள் சமையலில் பயன்படுத்தும் பொருள் கிராம்பு சிலருக்கு வெறுப்பை ஏற்படுத்தும் கிராம்பு பல மருத்துவ குணங்களை கொண்டது. உடலில் ஏற்படும் பல வகையான நோய்களுக்கும் கிராம்பு மருந்தாக அமைகிறது. அவற்றில் சில
தொண்டை வலி
தேனுடன் கிராம்புப் பொடியை கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி சரியாகும்.
அஜீரணம்
கிராம்பு பொடி மற்றும் கற்கண்டு பொடி இரண்டையும் ஒருசேர கலந்து ஒரு ஸ்பூன் சாப்பிட அஜீரண பிரச்சினை தீரும்.
வாந்தி
தேனுடன் கிராம்புப் பொடியை கலந்து சாப்பிடுவதனால் கற்பகால வாந்தியும் குணமடையும்.
நெஞ்செரிச்சல்
ஏலக்காய், கிராம்பு பொடி, கற்கண்டு பொடி என மூன்றையும் உணவு எடுக்கும் முன்பு உட்கொண்டால் நெஞ்செரிச்சல் சரியாகும். இதனை சாப்பிட்டு சரியாக அரை மணி நேரம் கழித்து உணவு உண்ண வேண்டும்.
தாகம்
அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தினாலும் தாகம் குறைந்தபாடில்லை எனும் பொழுது இரவு கிராம்பை தண்ணீரில் ஊறவைத்து காலையில் குடித்து வந்தால் தாக பிரச்சனையும் தீரும்.
பல் வலி
கிராம்பு பொடியை வைத்து பல் துலக்கி வர பற்கள் பலம் பெறும்.