Categories
சினிமா தமிழ் சினிமா

‘கோமாளி’ பட நடிகைக்கு கொரோனா…. தனிமையில் இருப்பதாக தகவல்….!!!

கோமாளி பட நடிகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் வெளியான வாட்ச்மேன், கோமாளி, பப்பி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. உடல்நலக்குறைவு காரணமாக பரிசோதனை செய்த இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அவர் கூறியதாவது, எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் இப்போது என்னைத் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளேன். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகிறேன். நீங்கள் அனைவரும் உங்களை கவனித்துக் கொள்ளுங்கள். கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எனது பெற்றோர்கள் தற்போது நன்றாக குணமடைந்து வருகிறார்கள். அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

Categories

Tech |