Categories
உலக செய்திகள்

ஊரடங்கு தளர்வு…. சூதாட்ட மையங்கள் திறப்பு…. அறிவித்தது பிரான்ஸ் அரசு….!!

சூதாட்ட மையங்கள் வரும் 19ம் தேதி முதல் இயக்கப்படும் என பிரான்ஸ் அரசு  அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக ஒரு சில நாடுகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் விளைவாக பிரான்சிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் வரும் 19ம் தேதி சூதாட்ட மையங்கள் திறக்கப்படும் என பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.

அதன் முதற்கட்டமாக தானியங்கி பண சூதாட்டங்கள் மட்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அதில் 35 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் வரும் ஜூன் மாதம் 9ஆம் தேதியிலிருந்து அனைத்து சூதாட்டம் மையங்களும் இயங்கும் எனவும் அனைவரும் சுகாதார பாதுகாப்பும் சமூக இடைவெளியை பின்பற்றியும் முகக் கவசங்கள் அணிந்து கொண்டும் செயல்பட வேண்டும் பிரான்ஸ் அரசு அறிவுறுத்தியது.

Categories

Tech |