Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இரவு 7 மணிக்கு தமிழக மக்களுக்கு முதல்வர் உரையாற்றுகிறார் ….!!

இன்று இரவு 7 மணிக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக முதல்வர் நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.

கொரோனா தடுப்பு  நடவடிக்கைகள் தொடர்பாக இன்று இரவு 7 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றுகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வலியுறுத்தி முதல்வர் பேசுகின்றார்.ஊரடங்கு உத்தரவை மீறி வாகன ஓட்டிகளும், மக்களும் பொதுவெளியில் கூடுவதை தவிர்க்க முதல்வர் அறிவுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு தருவது குறித்து பேச இருக்கிறார். ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்து முதல்வர் விளக்கி கூறுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் இரண்டு முறை பேசிய நிலையில் இன்று இரவு முதல்வர் முதல் முறையாக தமிழக மக்களுக்காக உரையாற்றுகிறார் .

Categories

Tech |