கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசும் இந்திய அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் தலைமை செயலாளர் சண்முகம் , காவல்துறை டிஜிபி திரிபாதி , உள்துறைச் செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றார்.
தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை முதல்வர் பிறப்பித்திருந்தார். இதனால் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு பேருந்து போக்குவரத்து தடை செய்யபட்டுள்ளது.இன்னொரு மாவட்டத்திற்கு மக்கள் பயணிக்கக் கூடாது என்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்ட்டுள்ளதால் அத்தியாவசியமான பொருட்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் மக்களுக்கு கிடைக்க வேண்டும்.
அதற்கு அதிகாரிகளும், காவல் துறையும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட இருக்கின்றது. இன்னும் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு மாநில அரசுக்கு எந்த மாதிரியான அறிவுரை கொடுத்து இவருகின்றது. அதை நாம் எந்த அளவுக்கு கடைப்பிடித்து வேண்டும் என்பது தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கின்றது. ஆலோசனை கூட்டம் முடிந்ததும் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்டுகின்றது.