முதல்வரும் , துணை முதல்வரும் ஒற்றுமையாக உள்ளனர் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , ஒரு நல்ல விஷயத்துக்காக முதல்வர் வெளிநாடு செல்லும்போது அதற்கு வாழ்த்து சொல்வது நல்ல பண்பாடாக இருக்கும். வெளிநாடு பயணத்தை விமர்சனம் செய்பவர்கள் தாங்கள் சம்பாதித்த சொத்துக்களை அங்கே முதலீடு செய்வார்கள். குறைகூறும் இவர்கள் அங்கு 5 நட்சத்திர ஓட்டல் கட்டுவார்கள், காம்ப்ளக்ஸ் கட்டுவார்கள் ஆனால் முதல்வர் தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகள் வர வேண்டும், வேலை வாய்ப்பு பெருக வேண்டும், பன்னாட்டு கம்பெனிகள் வரவேண்டும் என்று செல்கின்றார்.
பின்னர், துணை முதல்வரை அழைத்து செல்லாதது குறித்து கேள்வி எழுப்பியதற்கு எங்களுக்குள் உள்ள ஒற்றுமையை சீர்குலைக்க நினைத்தால் அது நடக்காது. துணை முதல்வர் முதலமைசரின் வீட்டுக்கு வந்து வாழ்த்து சொல்லி வழி அனுப்பியுள்ளார் . விமான நிலையத்துக்கு துணை முதல்வர் வந்துள்ளார். இருவருக்குள் சலசலப்பு என்று மற்ற அரசியல் கட்சிகள் பரப்புவது எடுபடாது. முதல்வர் , துணை முதல்வர் ஒற்றுமையாக உள்ளனர். சீர்குலைக்கும் முயற்சிகள் பலிக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.