முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கிடைக்கப்பெறும் நிதியை கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முதல்வரின் நிவாரண நிதியுதவு, பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியாக கணக்கிட தமிழக அரசு தெளிவுரை அளித்துள்ளது. வைரஸ் தடுப்பு பணிகளுக்கு அளிக்கப்படும் நிதி, சிஎஸ்ஆர் பங்களிப்பிற்கு பெறும் முதல்வரின் நிவாரண நிதியுதவி, பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியாக கணக்கிட தெளிவுரை அளித்துள்ளது.
முதல்வர் பொது நிவாரண நிதியை பாதுகாப்பு உபகரணங்கள் , வெண்டிலேட்டர் உபகரணங்கள் வாங்க பயன்படுத்த வேண்டும். மேலும் தனிமைப்படுத்தப்பட்ட வசதி, வீடற்ற ஏழைகள், புலம்பெயந்தவர்களுக்கு உணவளித்தல் உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதனால் பெருநிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் தாராளமாக நன்கொடை வழங்கலாம். கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை இன்னும் சிறப்பாக மேற்கொள்ள வசதியாக இருக்கும் என்பதால் ஒத்துழைக்க வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ஏப்ரல் 6 வரை நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில் நன்கொடையாக நேற்று வரை ரூ.79.74 கோடி பெறப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் தகவல் அளித்துள்ளனர். பேரிடர் நேரத்தில் நீங்கள் அளிக்கும் சிறு தொகை கூட ஏழை, எளிய மக்களைக் காப்பாற்ற பேருதவியாக இருக்கும். அனைத்து நன்கொடைகளுக்கும் ரசீது அனுப்பப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.