கன்னியாகுமரில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் 1 மற்றும் 2 அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
குமரியில் கோதையாறு பாசனத்திற்கு ஜூன் 8ம் தேதி முதல் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி வரை நாளொன்றுக்கு 850 கன அடி நீர்திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீர் திறப்பால் குமரி மாவட்டத்தில் கோதையாறு, பட்டணங்கால் பாசன பகுதிகளின் 79,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர்மகசூல் பெற கேட்டுக்கொள்வதாக முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.