Categories
மாநில செய்திகள்

முதல்வரின் ”சிறப்பு குறைதீர்ப்பு திட்டம்” முதல்வர் தொடங்கி வைத்தார்…!!

முதல்வரின் சிறப்பு குறைதீர்ப்பு திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் தொடங்கி வைத்தார்.

பொதுமக்களிடம் நேரடியாக புகார்களை பெற்று அதை கணினியில் பதியப்பட்டு விரைவில் தீர்வு எட்டப்படும் முதல்வரின் சிறப்பு குறைதீர்ப்பு திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள பெரிய சோரகை  பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த முதல்வர் அங்குள்ள பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

Image result for எடப்பாடி பழனிச்சாமி

இந்த மனுக்கள் மீது 1 மாதத்துக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். இதனால் யாரும் அச்சப்பட வேண்டாம்.  நடக்குமா நடக்காதா என்று கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறி பொதுமக்களிடம் முதல்வர் மனுக்களை பெற்றார். இதில் முதல்வருடன் அமைச்சர் உதயகுமார் , ராஜ சபா உறுப்பினர்  சந்திரசேகர் , சட்டமன்ற உறுப்பினர் செம்மலை , மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Categories

Tech |