Categories
சேலம் மாநில செய்திகள்

7 நாட்களில் தீர்வு ”சிறப்பு குறைதீர்ப்பு திட்டம்” முதல்வர் தொடங்கி வைக்கிறார்…!

மக்களின் குறைகளை  நகரங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் நிவர்த்தி செய்யும் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்ப்பு திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்.

இந்த திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் தொடங்கி வைக்கிறார். சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் மூலம் அனைத்து நகரங்களிலும் , கிராமங்களிலும்  விளம்பரம் செய்யப்பட்ட பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவுபடி குறிப்பிட்ட நாளில் வருவாய்த்துறை , ஊரக வளர்ச்சித்துறை , நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த குழுவினர் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் சென்று மனுக்களை பெறுவார்கள் என்று தமிழக அரசு கூறியுள்ளது.மேலும் ஒரு வார காலத்திற்குள் அந்த மனுக்கள் மீது தீர்வு எட்டப்படும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை முதற்கட்டமாக சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைக்கிறார். அங்குள்ள வனவாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் நேரில் சென்று மக்களிடம் மனுக்களை முதல்வர் பெற்றுக் கொள்ளுகின்றார். அதே போல பிற்பகல் 2 மணியளவில் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மக்களை சந்தித்து மனுக்களை  தமிழக முதல்வர் பெறுகின்றார்.

Categories

Tech |