Categories
அரசியல்

பதிலடி கொடுப்பதாக நினைத்து…. புது பிரச்சனையை ஏற்படுத்திவிடாதீர்கள்…. தொண்டர்களுக்கு முதல்வர் கடிதம்…!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் விமர்சனங்களை சந்திக்க நான் ஒருபோதும் தயங்கியதில்லை என்று தி.மு.க தொண்டர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் எழுதியிருக்கிறார்.

முதல்வர் மு.க ஸ்டாலின் தன் கட்சி தொண்டர்களுக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, போராடி வளர்த்தெடுத்த சமூகநீதியை வெட்டி சாய்ப்பதற்கு துடிக்கிறது நீட் என்ற கொடுவாள். விமர்சனங்களை நேரடியாக சந்திப்பதற்கு நான் ஒருபோதும் தயங்கியதில்லை.

உங்களுடன் இருக்கும் என் மீது சட்டமன்ற தேர்தல் காலம் மற்றும் அதற்கு முன்பாக எவ்வளவு விமர்சனங்கள் வைத்தார்கள் என்று உடன்பிறப்புகளாகிய உங்களுக்கு நன்றாகவே தெரியும்.  சிறிய செயல்பாடுகள் மூலமாக அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் சாதியை குறிப்பிட்டு திட்டுவார்கள். மதத்தை இழிவுப்படுத்துவார்கள். பெண்ணாக இருந்தால் ஆபாசமாக பேசிக்கொண்டிருப்பார்கள். அது தான் அவர்கள் கடைபிடிக்கும் அரைகுறையான பண்பாடு. வாழ்க வசவாளர்கள் என்னும் நம் வழக்கமான அடிப்படையை கொண்டு தான் நாம் கட்டாயம் செயல்பட வேண்டும்.

இதுதான் நமக்கான பண்பாடு. உலகம் போற்றும் நமது குணம் என்று தெரிவித்திருக்கிறார். மேலும், எடுத்துரைப்பதற்கு நம்மிடம் அதிகமான சாதனைகள் இருக்கின்றன. அவர்களுக்கு பதிலடி கொடுப்பதாக கருதி, புதிய பிரச்னையை உண்டாக்கிவிட கூடாது. பெருமையுடன் கூறுவதற்கு நம்மிடம் பீடுடைய வரலாறு உள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |