பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்ட 12 நுகர்பொருள் சேமிப்புக் கிடங்குகளை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பாக பல்வேறு மாவட்டங்களுக்கு கட்டப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்குகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் வேலூர் மாவட்டம் பாச்சூர் கிராமத்தில 2.65 கோடி இல் கட்டப்பட்ட தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இரண்டு சேமிப்பு கிடங்குகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதேபோல் கடலூர் மாவட்டம் கொட்டாரம் , மதுரை மாவட்டம் இடையப்பட்டி , திருநெல்வேலி மாவட்டம் முத்தூர் ஆகிய இடங்களில் 10 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 சேமிப்பு கிடங்குகளையும் முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.பின்னர் திருத்தப்பட்டு அச்சிடப்பட்ட மின்னணு குடும்ப அட்டைகளை 5 குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ காமராஜ் , கே.சி வீரமணி அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர்.