Categories
மாநில செய்திகள்

எந்தெந்த தொழில்களை தொடங்கலாம் என அறிக்கை அனுப்புமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு!

எந்தெந்த தொழில்களை படிப்படியாக தொடங்கலாம் என அறிக்கை அனுப்புமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடைபெற்றது. இந்த நிலையில், வெளிமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், எந்தெந்த தொழில்களை படிப்படியாக தொடங்கலாம் என அறிக்கை அனுப்புங்கள் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 6 மண்டலங்களில் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும், இதேபோன்ற சிறப்புக்குழுக்கள் கோவை, மதுரை, திருப்பூர் மற்றும் சேலம் மாநகராட்சிகளிலும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். அரசின் நிவாரண உதவிகள் கிடைக்காமல் விடுபட்டவர்களை கண்டறிந்து வழங்குங்கள் என்றும்

வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அவரவர் இடங்களுக்குச் சென்று உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும் என்றும் முதல்வர் கூறியுள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் மாஸ்க், சானிடைசர், 250 கிராம் கிருமி நாசினி பவுடர் வழங்கப்படும் என கூறியுள்ளார். சென்னையில் நோய்த்தடுப்பு பகுதிகளில் நகரும் கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளதாகவும்,

நடமாடும் சோதனை வாகனங்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் சந்தேகப்படுபவர்களின் வீட்டிற்கே சென்று சோதனை நடத்த உள்ளதாகவும் கூறியுள்ளார். விளை பொருட்களை சந்தைக்கு கொண்டுசெல்லவிவசாயிகளுக்கு தடை இருக்கக் கூடாது. 100 நாள் வேலைத்திட்டம், சமூக விலகலுடன் முகக் கவசம் அணிந்து நடைபெறுவதை உறுதி செய்யுங்கள் என்றும் மே மாதத்திற்கான ரேஷன் டோக்கன்களை நாள், நேரம் குறித்து வழங்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |