Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இன்று மாலை 6 மணிக்கு முதல்வர் பழனிசாமி உரை!!

இன்று மாலை 6 மணிக்கு முதல்வர் பழனிச்சாமி உரையாற்றவுள்ளார்.

கொரோனா பாதிப்புகள், தடுப்பு பணிகள், கட்டுப்பாடுகள் குறித்து காணொலி மூலம் தமிழக மக்களுக்கு முதல்வர் உரையாற்றவுள்ளார். தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இந்த சூழ்நிலையில், அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், தடுப்பு பணிகள் குறித்து அவர் விளக்கமளிக்கவுள்ளார்.

மேலும் சென்னையில் கொரோனா பாதிப்பினை கட்டுப்படுத்த அரசு எந்தவிதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது எனவும் குறிப்பிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளிக்க உள்ளார். சென்னையை தவிர்த்து மேலும் சிலை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

அந்த மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் பேச உள்ளார். மக்களுக்கு போதிய அளவு விழிப்புணர்வு தேவை என்றும் மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே தான் இந்த கொரோனா பரவலை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியும் எனவும் முதல்வர் வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வலியிடுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இன்று மாலை அவர் காணொலி மூலம் தமிழக மக்களிடம் உரையாடவுள்ளார்.

Categories

Tech |