உத்திரபிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் முலாயம் சிங். இவருக்கு இன்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மேதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருடைய உடல்நிலை மிகவும் மோசமானதால் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில் கட்சித் தொண்டர்கள் யாரும் மருத்துவமனையில் கூட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் முதல்வர் முழுமையாக குணமடைந்த பிறகு கட்சித் தொண்டர்கள் அவரை சந்திக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.