Categories
அரசியல் மாநில செய்திகள்

கொரோனா, ஊரடங்கை முறியடித்த C.M : மக்கள் உள்ளத்தை கொள்ளை கொண்ட ஸ்டாலின்; மெர்சலாகி பேசிய லியோனி …!!

அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்கள் மகரக்கட்டு மருத்துவம் என்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய திண்டுக்கல் லியோனி, கடந்த 2021ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு பொறுப்பேற்ற பொழுது நாம் எல்லோரும் முக கவசத்துடன் ஒருவருக்கொருவர் பேச முடியாமல்,  யார் என்ன பேசுகிறோம் ? யாரிடம் பேசுகிறோம் ? என்று கூட தெரியாமல் நடந்து கொண்டிருந்த வாழ்க்கையை மாற்றி,  தனது அயராத பணியால் அந்த கொரோனவையும், ஊரடங்கையும் முறியடித்து, இன்று நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இந்த விழாவிலே கலந்து கொள்வதற்கு…

மிக முக்கிய காரணமாக தனது அயராத செயலாற்றலால்…. தமிழக மக்கள் அனைவருடைய உள்ளத்தையும் கொள்ளை கொண்ட நம் தமிழக முதல்வர் அவர்களின்  அன்பிற்கு பாத்திரமான அருமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்கள் மகரக்கட்டு மருத்துவம் என்ற நூலை வெளியிட, அந்த முதல் நூலை நான் பெற்றுக்கொண்டேன்.

டாக்டர் காந்தராஜுக்கு  நான் ரசிகன், அவருடைய பேச்சுக்கு…  ரொம்ப அருமையான கருத்துக்களை எல்லாம், ரொம்ப அழகாக பேசுவார். இப்பொழுது கூட இசை அமைப்பாளர்கள் எல்லோரும் எப்படி எப்படி எல்லாம் சாதனை செய்து கொண்டிருக்கிறார்கள். இசைஞானி இளையராஜாவுக்கு சமமாக இன்னும் அதை விட பெரிய சாதனைகளை எல்லாம் எந்தெந்த  இசையமைப்பாளர்கள் பெற்று இருக்கின்றார் என்ற பெரிய பட்டியலை மடமடவென சொன்னார்.

ஜி.ராமநாதன் என்ற  இசை அமைப்பாளர் 1,958ம் ஆண்டே அப்படிப்பட்ட வெஸ்டின் மியூசிக்கில் ஒரு பாட்டும், அதை  பாடிய டி.எம் சௌந்தராஜனே  மேற்கத்திய இசையோடு பாட வைத்து மாபெரும் புரட்சி செய்தார். உத்தம புத்திரன் என்ற படத்தில்….  ஹா…..யாரடி நீ மோகினி
கூறடி என் கண்மணி….
ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ
ஆட ஓடிவா காமினி ”ஹா” என்கின்ற அந்த சத்தம் இருக்கிறது பாருங்கள்… அந்த சத்தத்தை டி.எம்.எஸ் கொடுத்தாரா ? இல்ல சிவாஜி கணேசன் கொடுத்தாரா ? என்று சந்தேகமா இருக்கும். இதுல பாஸ்ட் வாக்கிங்  சிவாஜி கனெக்ஷன் பண்ணி இருப்பாரு. அந்த பாஸ்ட் வாக்கிங்  தான் ரஜினிகாந்த் ஸ்டைலுக்கு அடிப்படை. உத்தமபுத்திரன் படத்தில் அவருடைய முமண்ட். இந்த மாதிரி நிறைய விவரங்கள் எல்லாம் அவருடைய பேச்சில் கொடுத்தார் என தெரிவித்தார்.

Categories

Tech |