Categories
மாநில செய்திகள்

CMDA-வில் இனி ஆன்லைனில் மட்டுமே…. அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

ஜி-ஸ்கொயர் நிறுவனத்துக்கு சி.எம்.டி.ஏ முறைகேடாக ஒப்புதல் அளிப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை 11:30 மணிக்கு சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, அண்ணாமலையின் புகாருக்கு பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது “சிஎம்டிஏ-வில் சிஇஓ பதவி புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளதாக அண்ணாமலை கூறுவது முற்றிலும் தவறானது ஆகும். சென்ற 1976-ஆம் வருடத்தில் இருந்து சிஎம்டிஏ-வில் சிஇஓ பதவி இருந்து வருகிறது. 40க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சி.இ.ஓ.வாக இருந்து உள்ளனர்.

அதிமுக ஆட்சியில் இறுதி 2 ஆண்டுகளாக சிஇஓ பதவி நிரப்பப்படாமல் இருந்த நிலையில், அதனை திமு.க. நிரப்பியது. அண்ணாமலை கூறுவதுபோன்று குறிப்பிட்ட நிறுவனத்திற்கு 3 நாட்களிலோ, 6 நாட்களிலோ அனுமதி வழங்கப்படவில்லை. கோவையில் 122 ஏக்கரில் ஜிஸ்கொயர் நிறுவனத்திற்கு அ.தி.மு.க. ஆட்சியில் ஒப்புதல் வழங்கப்பட்டது. சிஎம்டிஏ-வில் ஒற்றைசாளர முறையை எளிமையாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜிஸ்கொயர் நிறுவனத்துக்கு குறுகிய காலத்தில் எந்தவிதமான அனுமதியும் வழங்கப்படவில்லை. 2 மாதங்களில் பணிகள் முடிந்ததும் ஒற்றை சாளரமுறை வாயிலாகவே அனைத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் ஜி ஸ்கொயர் விவகாரத்தில் எவ்விதமான விதிமீறலும் இல்லை. சிஎம்டிஏ-வில் இனி ஆன்லைனில் மட்டுமே திட்ட அனுமதி வழங்கப்படும். கோவை, ஓசூர், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளிலும் பெருநகர வளர்ச்சி குழுமம் உருவாக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |