தமிழகத்தில் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முன் களப்பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் இணை நோய்கள் கொண்ட 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
மேலும் இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தடுப்பூசி செலுத்தும் போது தங்களுடைய தொலைபேசி எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வரும். மேலும் தடுப்பூசி செலுத்துவதற்கு அது ஒரு ஆதாரமாக இருக்கிறது. இந்நிலையில் Co-WIN செயலியில் ஒரே தொலைபேசி எண்ணை பயன்படுத்தி 6 பேர் வரை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 4 பேர் பதிவு செய்யலாம் என்று கூறிய நிலையில், தற்போது 6 பேர் வரை பதிவு செய்ய முடியும் என்றும், தடுப்பூசி செலுத்திய விவரங்கள் செயலியில் தவறாக இருந்தால் பயனாளி திருத்திக்கொள்ளும் வசதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.