கூட்டணிக் கட்சிகள் போட்டியிட விரும்பும் சின்னத்தை வழங்குவது எங்களது கடமை ஆகும் என்று திமுக தலைவர் தெரிவித்துள்ளார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அனைத்து கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதில் அதிமுக-திமுகவிற்கு இடையே பெரும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரான மு க ஸ்டாலின் கூட்டணிக் கட்சிகள் குறித்து தெரிவித்துள்ளார்.
எங்களது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த பலர் சதி செய்து வருகின்றன. திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கூட்டணி கட்சிகளுக்கு நிர்ப்பந்திக்கப்படவில்லை. மக்கள் மனதில் இடம் பெற்ற சின்னத்தில் கூட்டணி கட்சிகள் போட்டியிட விரும்பினால் அதை வழங்குவது எங்களது கடமை ஆகும் என்று தெரிவித்துள்ளார்.