கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவதை தடுக்கும் விதமாக சாகர் கவாட்ச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியானது தமிழக கடற்கரை பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்திய எல்லை பகுதிகளுக்குள் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்கவும், கடலோர பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் ஆண்டுதோறும் சாகர் கவாட்ச் என்னும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் இவ்வாண்டு சாகர் கவாட்ச் நிகழ்ச்சியானது தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளது. தூத்துக்குடி கடற்கரை முதல் வேம்பார் கடற்கரைப் பகுதி வரை காலை மாலை 6 மணி அளவில் சாகர் கவாட்ச் ஒத்திகை நிகழ்ச்சி தொடங்கியது.
இதில் கடலோர பாதுகாப்புபடை ,கடலோர காவல்படை மற்றும் காவல்துறையினர் கூட்டாக ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றார்கள். புதுச்சேரியில் 18 மீனவ கிராம கடற்கரை பகுதிகளில் சாகர் கவாட்ச் ஒத்திகை நிகழ்ச்சி காலை 6 மணிக்கு தொடங்கியது. அதில் அப்பகுதியை சேர்ந்த கடலோர பாதுகாப்பு படையினர், கடலோர காவல்படை மற்றும் காவல்துறையினர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு பின் மீனவ மக்களிடம் பேசிய காவல்துறையினர்,கடல் வழியாக புதிய படகுகள் மற்றும் அறிமுகம் இல்லாத நபர்கள் வருவது தென்பட்டால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தினர்.