ராமநாதபுரம் மாவட்டம் கடற்பகுதிகளில் அறிய வகை சங்குகள், கடல் சிற்பிகள் கரையோரம் ஒதுக்கியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா ஆகிய கடல் பகுதியில் டால்பின், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் பசு போன்ற அரியவகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அதுமட்டுமல்லாது கடல் சங்குகளும், அரிய வகை சிற்பி வகைகளும் உள்ளது. இதனையடுத்து மண்டபம் யூனியனுக்கு உட்பட்ட ஆற்றங்கரை கடற்கரை பகுதியில் கடல் அலை மற்றும் நீரோட்டத்தின் வேகத்தால் கடலில் இருக்கும் அரிய வகை சங்குகள், சிற்பிகள் போன்றவை கரையோரம் ஒதுங்கி உள்ளது.
இதனை தொடர்ந்து கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் சுற்றுலா தலம் போன்ற இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே கடற்பகுதிக்கு யாரும் செல்லாததால் ஏராளமான சிற்பிகள் கரையோரம் குவிந்துள்ளது. மேலும் உச்சிப்புளி அருகே உள்ள அரியமான் கடற்கரை இதே போன்ற அறிய வகை சிற்பிகளும் காணப்படுகின்றது.