‘கோப்ரா’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகும் என்ற தகவலை தயாரிப்பு நிறுவனம் மறுத்துள்ளது.
முன்னணி நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கோப்ரா’. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்து வரும் இப்படத்தினை ஞானமுத்து இயக்கிவருகிறார். மேலும் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.
இந்நிலையில் பிரபல ஓடிடி தளம் ஒன்று கோப்ரா பட ரிலீஸ் உரிமையை கைப்பற்றி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, செவன் கிரீன் நிறுவனம் “இது ஒரு பொய்யான செய்தி என்று ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளது.
Fake News !! https://t.co/RCbW2EuSZH
— Seven Screen Studio (@7screenstudio) April 10, 2021