அட்லாண்டிக் பெருங்கடலில் ஒரு டன் எடை கொண்ட போதை பொருட்கள் மாட்டிக்கொண்ட நிலையில், மூன்று பிரிட்டன் நபர்களுக்கு இதில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.
ஐரோப்பாவிற்கு, கரீபியனிலிருந்து ஒரு படகு புறப்பட்டு சென்றுள்ளது. அதனை ஸ்பெயின் காவல்துறையினர் மற்றும் சுங்க அதிகாரிகள் இணைந்து இடைமறித்து சோதனை செய்துள்ளனர். அதில் கொக்கைன் என்ற போதைப்பொருள் சுமார் ஒரு டன் இருந்தது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 80 மில்லியன் பவுண்டுகள் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த மாதத்தில் ஸ்பெயினில் ஒரு சோதனையின் போது, சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலில் 10 பேர் மாட்டிக் கொண்டார்கள். அதில், பிரிட்டனின் முன்னாள் கடற்படை வீரரான Robert Mark Benson-ன் தலைமையில் உள்ள போதைப் பொருள் கும்பல் தான் தற்போது காவல்துறையினரிடம் மாட்டிக் கொண்டதாக நம்பப்படுகிறது.
அவர் கைது செய்யப்பட்ட பின்பே இந்த படகு மாட்டிக்கொண்டது. இந்த படகில் பயணித்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதில் இரண்டு பேர் பிரிட்டனை சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது.