கொலம்பியாவில் நடுக்கடலில் கடற்படையினர், நீர்மூழ்கி கப்பலை விரட்டிச் சென்று 4 டன் மதிப்புக் கொண்ட கொக்கைன் போதைப் பொருளை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
தெற்கு பசிபிக் கடலில் ஒரு நீர்மூழ்கி கப்பலானது, போதைப் பொருட்களுடன் மத்திய அமெரிக்காவை நோக்கி செல்வதாக கொலம்பியவை சேர்ந்த கடற்படையினருக்கு தகவல் வந்திருக்கிறது.
இதனைத்தொடர்ந்து, உடனடியாக நடுக்கடலில் அந்த கப்பலை கடற்படையினர் விரட்டி பிடித்தனர். அதன்பின் அந்த கப்பலில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சுமார் 200 கோணி பைகளில், செவ்வக வடிவத்தில் கொக்கைன் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் ஒட்டு மொத்த மதிப்பு சுமார் 150 பில்லியன் டாலர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.