Categories
உலக செய்திகள்

அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை… விமானத்தில் சிக்கிய பொருள்கள்… வெளியான பரபரப்பு தகவல்..!!

பிரேசிலில் மத்திய காவல் துறையினர் தனியார் விமானம் ஒன்றில் மேற்கொண்ட சோதனையில் சுமார் ஆயிரம் கிலோவுக்கு மேற்பட்ட கோகோயின் போதைப்பொருள் சிக்கியுள்ளது.

கடந்த புதன்கிழமை அன்று Fortaleza-வில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கிய தனியார் விமானம் ஒன்றில் மத்திய காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்த தனியார் விமானத்தின் உள்ளே சந்தேகத்திற்கிடமாக 24 சூட்கேஸ்கள் இருந்துள்ளது. இதையடுத்து அந்த சூட்கேஸ்களை திறந்து பார்த்தபோது ஒவ்வொன்றிலும் சுமார் 50 பிளாஸ்டிக் பைகள் கட்டுகட்டாக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அதன் பிறகு அந்த பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் கத்தியால் வெட்டி பிரித்து பார்த்துள்ளனர். அப்போது அந்த பிளாஸ்டிக் பைகளின் உள்ளே சுமார் 1304 கிலோ எடைகொண்ட கோகோயின் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விமானத்தில் பயணித்த ஸ்பானிஷ் பயணியிடம் அதிகாரிகள் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதையடுத்து அதிகாரிகள் விமானத்தின் கேப்டன், அந்த ஸ்பானிஸ் பயணி மற்றும் இரண்டு விமான ஊழியர்கள் உள்ளிட்டோரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மத்திய காவல் துறையினர் அந்த ஸ்பானிஸ் பயணியை கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |