தற்போது சமூக வலை தளங்களில் கரப்பான் பூச்சி சவால் என்ற ஒன்று வைரலாக பரவி வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் இதுவரை பல்வேறு சவால்கள் மக்களிடையே வைரலாகியுள்ளன. அவற்றில் டென்(10) இயர்ஸ் சேலஞ்ச், மோமோ சேலஞ்ச், கிகி சேலஞ்ச் போன்றவை முக்கியமான ஒன்றாகும். இந்நிலையில் தற்போது கரப்பான் பூச்சி சவால் வைரலாக பரவி வருகிறது.
இந்த சவாலில் கரப்பான்பூச்சியை முகத்தில் ஓடவிட்டு செல்பி எடுக்கவேண்டும் என்பதே சவாலாகும். இந்த சவாலை முதன்முதலாக பர்மாவைச் சேர்ந்த அலெக்சன் என்ற இளைஞர் தொடங்கியுள்ளார். கரப்பான் பூச்சியை பார்த்து மக்கள் பயப்படுவதை தடுப்பதே இதன் நோக்கமாகும். இந்த சவாலை பல்வேறு மக்கள் ஏற்றுக்கொண்டு சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பதிவிட்டு வருகின்றனர்.