சூப்பரான சுவையில் தேங்காய் சாதம் செய்வது எப்படி .
தேவையான பொருட்கள் :
தேங்காய் – 1
அரிசி – 2 டம்ளர்
கடலைப்பருப்பு – 100 கிராம்
வேர்க்கடலை – 50 கிராம்
பெருங்காயத்தூள் – 1 டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 8
கறிவேப்பிலை –தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசியை அலசி உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும் . பின் ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, வேர்க்கடலை, கடலைப்பருப்பு, துருவிய தேங்காய் சேர்த்து சிவக்க வறுத்து கொள்ள வேண்டும். வறுத்த கலவையை சாதத்தில் கொட்டி கிளறி மல்லி இலை தூவி பரிமாறினால் சூப்பரான தேங்காய் சாதம் தயார் !!!