தேங்காய் பருப்பு விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள கொளத்துப்பாளையம், வேட்டமங்கலம், குமராபாளையம், மரவாபாளையம், சேமங்கி, நொய்யல் போன்ற பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தென்னை மரத்தைப் பயிரிட்டு தேங்காய் விளைந்தவுடன் கூலி ஆட்கள் மூலம் அதனை பறித்து உரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் பருப்பு ரூபாய் 139 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த வாரம் இதன் விலை 134.9 விற்பனை செய்யப்படுகிறது. இதன் வித்யாசம் 4 ரூபாய் 50 காசுகள் ஆகும். இவ்வாறு தேங்காய் பருப்பு வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.