கொப்பரை தேங்காயின் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கோவை, திருப்பூர், ஈரோடு, தஞ்சை உள்பட 21 மாவட்டங்களில் அதிகளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகின்றது. இதிலிருந்து விவசாயிகள் அதிகமாக கொப்பரை தேங்காயை உற்பத்தி செய்கின்றனர். இந்நிலையில் கொப்பரை தேங்காய் குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூபாய் 375 வரை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வேளாண்மை விலை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு குவிண்டால் அரவை கொப்பரை தேங்காய் ரூ.9, 960-இல் இருந்து ரூ.10,335 ஆக உயர்த்தி வழங்கப்படும். விலை உயர்த்தப்பட்டால் உற்பத்தி செலவில் விவசாயிகளுக்கு 52% – 55%வரை வருவாய் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.