மின்னல் தாக்கி தென்னைமரம் தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாளரகுறிச்சி கிராமத்தில் செந்தில்குமார் என்ற விவசாயி வசித்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. அப்போது மின்னல் தாக்கி செந்தில்குமாரின் வீட்டுத் தோட்டத்தில் இருந்த தென்னைமரம் திடீரென தீப்பற்றி எரிந்து விட்டது.
இவ்வாறு மின்னல் தாக்கி தென்னை மரம் தீப்பிடித்து எரிந்ததை அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்துள்ளனர். மேலும் தென்னை மரத்தில் பற்றிய தீ மற்றொரு மரத்திற்கும் பரவி விட்டது. ஆனால் அங்கு பெய்த கனமழை காரணமாக பற்றி எரிந்த தீ அணைந்து விட்டது.