இளநீர் ரசம்
தேவையான பொருட்கள் :
இளநீர் – 1 கப்
தக்காளி சாறு – 1/4 கப்
துவரம்பருப்பு – 1 டீஸ்பூன்
மிளகு- 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிது
இளநீர் வழுக்கை – 1/4 கப்
கடுகு – 1/4 ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் துவரம்பருப்பு , மிளகு , சீரகம் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் இளநீர் வழுக்கையையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி இதனுடன் இளநீர், தக்காளி சாறு, உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்துச் சேர்த்தால் சூப்பரான இளநீர் ரசம் தயார் !!!