Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காப்பி உற்பத்தி நிலையம்… தொடர்ந்து வரும் ஆய்வு பணிகள்… தரத்தை கேட்டறிந்த ஆட்சியர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலையில் காப்பி மற்றும் மிளகு உற்பத்தி செய்யப்படும் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 28 தொழில் குழுக்களை கொண்ட ஒருங்கிணைத்த மிளகு மற்றும் அரப்பளி காபி உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிலையம் உள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் நேற்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இந்நிலையில் கொல்லிமலையில் வசிக்கும் மக்கள் அவர்கள் உற்பத்தி செய்யும் காப்பி மற்றும் மிளகை தொழில் கூட்டமைப்பில் வழங்குவது வழக்கம்.

இதனையடுத்து விவசாயிகள் அறுவடை செய்த காப்பி கொட்டைகளை உற்பத்தி நிலையத்தில் நவீன இயந்திரம் மூலம் அரைத்து அதனை காப்பி தூளாக மாற்றுகின்றனர். இதனை வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்வதோடு கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும் விற்பனை செய்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உற்பத்தி நிலையம் மற்றும் விற்பனை நிலையத்தை பார்வையிட்டு அதன் தரம் குறித்து கேட்டறிந்துள்ளார். இந்த ஆவின்போது தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் பிரியா, தாசில்தார் கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என பலரும் உடனிருந்துள்ளனர்.

Categories

Tech |