Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோயம்பேடு: தி.மலையில் 10 பேருக்கு கொரோனா தொற்று …!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாகவே பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினமும் 500க்கும் அதிகமான எண்ணிக்கையில் இருந்து வருகின்றது. தலைநகர் சென்னை கொரோனாவின் மையமாக விளங்கி வருகின்றது. அங்குள்ள கோயம்பேடு காய்கறிச் சந்தை மூலமாக 20க்கும் அதிகமான மாவட்டங்களில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து  கோயம்பேடு காய்கறிச் சந்தை மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில்  இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வந்தவாசி, பெரணமல்லூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு எடுக்கப்பட்ட மாதிரியில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு கோயம்பேடு சந்தை மூலமாக கொரோனா பரவியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |