Categories
மாநில செய்திகள்

“கோவை கார் விபத்து”…. ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு….‌ பாஜக எழுப்பும் சந்தேகம் உண்மையா?…..!!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டைமேடு அருகே நேற்று அதிகாலை ஒரு கார் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்தக் கோர விபத்தில் ஜமேஷா முபீன் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்‌. இது குறித்த தகவலின்படி  காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதிவான தடையங்களை சேகரித்தனர். அதன்பிறகு விபத்தில் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சிலிண்டர் வெடித்ததில் கார் வடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் உயிரிழந்த நபரின் வீட்டில் சில நாட்களுக்கு முன்பாக என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியதில், வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கூறுகையில் உயிரிழந்த நபரின் மீது எந்த ஒரு வழக்குகளும் பதியப்படாத நிலையில் சதி திட்டத்திற்காக வீட்டில் வெடிபொருட்களை பதுக்கி வைத்திருக்கலாம் என்று கூறியுள்ளார். அதன் பிறகு ஜமேஷா வீட்டில் இருந்து சில மர்ம நபர்கள் வெடி பொருட்களை எடுத்துச் செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளது. இந்த ஆதாரத்தை அடிப்படையாக வைத்து முகமது நவாஸ் இஸ்மாயில், ப்ரோஸ் இஸ்மாயில், முகமது ரியாஸ், முகமது அசாரூதின், முகமது தல்கா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தற்போது பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கோவையில் நேற்று நடந்த கார் விபத்தில் தொடர்புடைய ஐந்து பேரை காவல்துறையினர் விரைவாக செயல்பட்டு கைது செய்ததற்கு என்னுடைய பாராட்டுகள்‌. கார் விபத்தில் உயிரிழந்த நபருக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம். எனவே விபத்துக்கு பின்னால் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கிறதா என்று கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |